நீதா அம்பானி புடவையின் வேலைப்பாடுகள்: தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க
உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி வெள்ளை மாளிகைக்கு அணிந்து சென்ற சாரி தற்போது அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நீதா அம்பானியின் புடவை வேலைப்பாடுகள்
கடந்த ஜுன் 22ஆம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடன் ஆகியோரால் நடத்தப்பட்ட சிறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கௌரவிக்கப்பட்டார்.
இந்த விழாவிற்கு உலகில் செல்வாக்கு பெற்றவர்களையும் அழைத்திருந்தனர். அதில் முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீதா அம்பானியும் கலந்துக் கொண்டிருந்தனர். இதில் நீதா அம்பானி அணிந்து வந்த புடவை அதிகம் கவனம் ஈர்த்திருந்தது.
எப்போதும் தான் அணியும் ஆடைகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நீதா அம்பானி அந்த விழாவிற்கு ஒரு பட்டுப்புடவையை அணிந்து சென்றிருந்தார்.
இந்த புடவையை வாரணாசியில் வடிவமைத்த பனராசி ப்ரோகேட் என்ற கைத்தறி புடவை, இந்தப் புடவையை நெய்வதற்கு சுமார் ஒரு மாத காலம் போனதாம். மேலும், இது ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஸ்வதேஷ் கண்காட்சியில் தயாரிக்கப்பட்டது.
இந்தப் புடவையில் பல நுணுக்கமான கைவினைத்திறன்களைக் காட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்தப் பட்டுப்புடவையில் மூன்று வரிசைக் கொண்ட முத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் புடவைக்கு ஏற்றதுப் போல வைரமும் முத்தும் பதித்த காதணிகளையும் கழுத்துக்கு மாலையும் அணிந்திருக்கிறார்.
#WATCH | Washington, DC | Mukesh Ambani and Nita Ambani arrive at the White House for the State Dinner pic.twitter.com/qJ1wP3KZym
— ANI (@ANI) June 22, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |