இப்படியும் ஒரு கணவனா? காதல் மனைவிக்காக கஷ்டப்பட்ட நபர்- நெகிழ்ச்சி கதை
தனது காதல் மனைவியை படிக்கவைத்து பட்டம் பெற வைத்த கணவன் பற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது.
துணையாக நின்ற கணவன்
படிப்பதற்கு வயது தடையில்லை என சொல்வார்கள் அதனை நிஜமாக்கிய பெண்மணிதான் நீலா. 49 வயதுடைய நீலா நர்சிங் படிப்பில் 'ஹீமோடயாலிசிஸ்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார்.
குடும்பத்தில் 2வது பெண் பிள்ளையாக பிறந்த நீலா படிப்பின் மேல் கொண்ட அதீத ஆசையால் அவரின் தந்தை அவருக்கு வழிகாட்டியாக இருந்து வந்துள்ளார்.
12ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற நீலா, முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியிடம் பரிசும் பெற்றுள்ளார். பிறகு தான் காதலித்த கணவர் ஷேக் காதரை கரம்பிடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் படிப்பைத் தொடர கணவன் துணையாக நின்றுள்ளார். கணவனின் துணையுடன் நீலா நர்சிங் பணியை மேற்கொண்டபடியே படிப்பை தொடர்ந்துள்ளார்.
அதன் விளைவாவே நேற்று அவர் 12வது பட்டத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பட்டப்பளிப்பு விழா
நீலாவின் கனவை நிறைவேற்ற தனியார் நிறுவனத்தில் சாரதியாக பணியாற்றி, அதில் வரும் வருமானத்தை கொண்டு பூர்த்தி செய்திருக்கிறார் கணவர் ஷேக் காதர்.
நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழா மேடையில் நிர்மலா சீதாராமன் கையில்தான் பட்டம் பெற்றுள்ளார் நீலா.
பட்டப்பளிப்பு விழாவில் பேசிய நீலா, நீலாவையும், அவருடைய படிப்புக்கு ஊன்றுகோலாய் இருந்தது என் கணவர் ஷேக் காதரையும் பாராட்டியுள்ளார்.
'பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மிகவும் அவசியம். குடும்பத்தில் இருப்பவர்கள், பெண் குழந்தைகள் மேற்படிப்பு படிக்க விரும்பினால் தடை செய்யாதீர்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள்' என்று நீலா தெரிவித்துள்ளார்.