sunday special: நீலகிரி சிக்கன் குருமா...ஒரு முறை இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே ஞாயிற்று கிழமை என்றாலே பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால் நாவுக்கு ருசியாக சமைத்து சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள்.
அப்படி இன்று சப்பாத்தி, நாண்,புல்கா,தோசை, சாதம் என அனைத்திற்கும் சூப்பரான சைட் டிஷ்ஷாக இருக்கும் இந்த நாவூறும் நீலகிரி சிக்கன் குருமாவை வீட்டில் எப்படி எளிமையாக செய்லாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
சிக்கன் - 1 கிலோ
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தே.கரண்டி
நறுக்கிய தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு தேவையானவை
சீரகம் - 1 தே.கரண்டி
சோம்பு - 1 தே.கரண்டி
கசகசா - 1 தே.கரண்டி
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 2
துருவிய தேங்காய் - 5 தே.கரண்டி
முந்திரி - 5
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
புதினா - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸியில் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அmதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடத்துக்கு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5 நிமிடம் வரையில் நன்றாக கிளறி விட வேண்டும்.
பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, 2 நிமிடங்கள் நன்றாக கிளறிவிட்டு, பின்னர் சிக்கன் ஓரளவு வெந்தவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்கள் வரையில் நன்றாக வேகவிட்டு இறக்கினால் சுவையாக நீலகிரி சிக்கன் குருமா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
