இரவில் சாதம் சாப்பிடக்கூடாதா? பலரும் அறியாத உண்மை இதோ
பொதுவாக இரவு நேரங்களில் பலரும் இட்லி, தோசை, சப்பாத்தி உணவுகளையே சாப்பிட்டு வரும் நிலையில், இரவில் சாதம் சாப்பிடுவது நல்லதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சாதம் சாப்பிடுவது நல்லதா?
இந்தியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருப்பது அரிசியே... ஆம் அரிசி சாதத்தினையே விரும்பி சாப்பிடுகின்றனர். காலையில் அதிக உணவையும், மதியம் லேசான உணவையும், இரவில் மிதமான உணவையும் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
காலை உணவாக அரிசி சாதம் சாப்பிடுவது ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவியாக இருக்கின்றது. அரிசி சாதத்தில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளதுடன், இதில் பட்டாணி, பீன்ஸ், கேரட், கீரை என சத்தான சைட் டிஷ்ஷை சேர்த்துக் கொள்ளலாம்.
அரிசி சாதம் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு ஆகும். எனவே காலை உணவாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.
காலையில் அரிசி சாதத்தினை உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம். ஏனெனில் சர்க்கரையின் அளவு காலை வேலையில் வேகமாக உயருமாம். இதனை கட்டுப்படுத்தவும் செய்கின்றது.
அரிசி சாதம் சாப்பிடுவதால் எடை குறைவதுடன், அஜீரணத்திற்கு தீர்வும் கிடைக்கின்றது.
பொதுவாக உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் போது அதிக ஆற்றல் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலையில் சாதம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இரவில் அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.