இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது ஆரோக்கியமா? அல்லது ஆபத்தா?
இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது சிறந்ததா? அல்லது உடல்நல பிரச்சனை ஏற்படுமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இளநீர்
உலகில் உள்ள மக்கள் அனைவரும் இளநீர் விரும்பி குடிக்கின்றனர். ஏனெனில் இதில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றது.
குறிப்பாக கோடை காலங்களில் இளநீர் வியாபாரம் என்பது இந்தியாவில் அமோகமாகவே இருக்கின்றது. ஒவ்வொரு தரத்திற்கும் ஒவ்வொரு விலையும் நிர்ணயிக்கப்படுகின்றது.

தரம் மட்டுமின்றி அளவைப் பொறுத்தும் விலை காணப்படுகின்றது. கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தினை எதிர் கொள்வதற்கு இளநீர் முக்கியமாக பருக வேண்டியுள்ளது.
பெரும்பாலான நபர்கள் இளநீரை காலையில் அருந்துகின்றனர். மிகவும் குளிர்ச்சி தன்மை கொண்ட இளநீரை இரவு நேரத்தில் அருந்தலாமா என்ற கேள்வி அநேகருக்கு எழுந்திருக்கும்.

இரவில் இளநீர் குடிக்கலாமா?
இரவு தூங்குவதற்கு முன்பு இளநீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை அளிப்பதுடன், பருவகால நோய் தொற்றிலிருந்தும் பாதுகாப்பதற்கு உதவுகின்றது.
இளநீரில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கின்றது. அதுமட்டுமின்றி அதிகப்படியான வைட்டமின்கள், தாதுக்கள் இளநீரில் அடங்கியுள்ளதால், கூந்தல் மற்றும் சருமத்திற்கு வழு சேர்க்கவும் செய்கின்றது.
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இரவு படுக்கும் முன்பு இளநீர் குடிக்கலாம். இவற்றிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகின்றது.

மேலும் இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. இவை உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையினை போக்குவதற்கு சிறந்தது.
இதயநோய் பிரச்சனை வராமல் தடுப்பதுடன், இளநீர் ஆரோக்கியத்ில் முக்கிய பங்கும் வகிக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |