திருமணமான 2 மாதத்தில் ரத்த வெள்ளத்தில் புதுப்பெண்... நடந்தது என்ன?
திருமணமான இரண்டு மாதத்தில் புதுப்பெண் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுப்பெண் கொலை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள கீழ் அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிலரம்பரசன்(29) என்பவருக்கும், சீர்காழி அருகே அரசூரைச் சேர்ந்த ரோஜா(25) என்ற பெண்ணிற்கும் கடந்த மே மாதம் 4ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணமான நாளிலிருந்து இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வழக்கம் போன்று நேற்று இரவும் இவர்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், ஆத்திரமடைந்த சிலம்பரசன் தனது கையில் இருந்த பிளேடால் ரோஜாவின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ரோஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது கணவர் சிலம்பரசன் காவல்நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |