தேனிலவில் குதிரை சவாரி சென்ற புதுமண ஜோடி! பரிதாபமாக உயிரிழந்த மாப்பிள்ளை
தேனிலவின் போது குதிரை சவாரி சென்ற புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
குதிரை சவாரி செய்த புதுமாப்பிள்ளை
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையை சேர்ந்தவர் முகமது காசிப் இம்தியாஸ் ஷேக்(23). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், தேனிலவு செல்ல முடிவு செய்து, ராய்கட் என்னும் மலைவாசஸ்தளத்திற்கு சென்றுள்ளனர்.
மும்பையில் இருக்கும் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக இருக்கும் இதில் குதிரை சவாரி என்பது மிகவும் பிரபலமாக உள்ளது. இதனால் மனைவியுடன் குதிரை சவாரி செய்ய நினைத்த ஷேக் குதிரை மீது ஏறியுள்ளார்.
ஷேக் மட்டுமின்றி அவரது நண்பர்கள் இரண்டு பேர், மற்றும் மனைவி என நான்கு பேர் தனித்தனி குதிரையில் சவாரி செய்துள்ளனர். அப்பொழுது ஷேக் பயணித்த குதிரை மட்டும் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றுள்ள நிலையில், ஷேக் நிலை தடுமாறி பாறைகள் நிறைந்த இடத்தில் கீழே விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷேக்கின் நண்பர்கள் உடனடியாக அவரை மதேரான் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக உல்ஹஸ் நகர் பகுதியில் இயங்கி வரும் மருத்துவமனையில் ஷேக் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் ஷேக் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார்.
இதில் பலத்த காயமடைந்த ஷேக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதாவது குதிரை சவாரி மேற்கொள்ளும் எந்தவொரு பாதுகாப்பு கவசம் அணியாமல் சென்றுள்ளதே இந்த விபத்திற்கு காரணம். இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.