அம்மா இங்க ஒரே பிரச்சனையா இருக்கு! போனில் கதறியபடியே தூக்கில் தொங்கிய இளம்பெண்
தமிழகத்தில் காதல் திருமணம் செய்த பெண் திடீரென தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
களக்காடு அருகே உள்ள மீனவன்குளத்தை சேர்ந்தவர் நாராயணன், இவரது மகன் ரெனிஸ்(வயது 25).
இவருக்கும் வைகுண்டராஜன் மகள் சாந்தினிக்கும்(வயது 21) காதல் மலர்ந்துள்ளது.
இதுகுறித்து பெற்றோர்களுக்கு தெரியவர, இரு வீட்டார் சம்மதத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமும் நடந்து முடிந்துள்ளது.
ஆனால் குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில், நேற்று சாந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு முன்னதாக, தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து, வீட்டில் ஒரே பிரச்சனையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் சாந்தினியின் கணவர் ரெனிஸ்க்கு குடிப்பழக்கம் இருப்பதும், இதனால் அடிக்கடி கணவன்- மனைவி இடையே தகராறு இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
கணவருடன் ஏற்பட்ட தகராறில் சாந்தினி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வரதட்சணை பிரச்சினை உள்ளிட்ட வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.