2023 ல் ராகு விட்டாலும் சனி பார்வையில் சிக்க போகும் ராசிக்காரர்கள்! புத்தாண்டு ராசிப்பலன்
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் சஞ்சாரத்தின்படி கணிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து இன்னும் 2 நாட்களில் உதயமாகவிருக்கும் புத்தாண்டில் யாருக்கு எவ்வாறு அமையப்போகிறது என்பதனை நினைக்கும் ஆவலாக இருக்கும்.
இதன்படி, சில குருக்கள் புத்தாண்ட பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை கணித்துள்ளார்.
அந்தவகையில் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதி மேஷ ராசியில் இருந்து குரு ஆளும் மீன ராசிக்கு ராகு செல்கிறார்.
இதனால் ராகு மீன ராசிக்கு செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு சனி தோஷம் ஏற்படவுள்ளது.
இதனை தொடர்ந்து அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்பது பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.
ராகு விட்டாலும் சனியின் பார்வையில் சிக்க போகும் ராசிக்காரர்கள்
1. மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சியால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படவுள்ளது. குறிப்பாக ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும் மற்றும் பணி புரியம் இடங்களில் வாயை கவனமாக பாவிக்க வேண்டும். இதனால் எதிரிகள் அதிகரிக்கலாம்.
2. சிம்மம்
கண்டச் சனியாக அமர்ந்திருக்கும் சனிபகவான் விட்டாலும் குறிப்பாக சிம்ம ராசியினரை ராகு விடமாட்டார். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
ராகு பெயர்ச்சி காலத்தில் அதிக பணப் பற்றாக்குறையை சந்திப்பீர்கள். கண்களில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
இக்காலத்தில் கடுமையாக பேசுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
3.மீனம்
2023-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியின் போது மீன ராசியின் முதல் வீட்டிற்கு ராகு செல்கிறார். புத்திசாலித்தனமாக நடந்துக் கொள்வது சிறந்தது. இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திப்பீர்கள்.
மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையை எதற்கும் கட்டாயப்படுத்தாமல், அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயலுங்கள். இல்லாவிடின் திருமண வாழ்க்கை முடிவு பெறலாம்.