இன்று முதல் புதிய கட்டுப்பாடு - வாட்ஸ்அப் பாவனையாளர்கள் அதிர்ச்சி
மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வாட்ஸ் அப் இற்கு புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வாட்ஸ்அப்
ஸ்மாட் போன்களில் வாட்ஸ்அப் இருப்பதை கண்டிருப்பீர்கள். இந்த வாட்ஸ் அப் முழுக்க முழுக்க செய்திகளை பரிமாறவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் பல புதிய புதிய அப்டேட்களை சமீபத்தில் கொடுத்து வந்துள்ளது. அந்த வகையில் பல நாட்களுக்கு முன்பு டெலிட் மெசேஜ் என்ற ஆப்ஷனை வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது.

இது வாட்ஸ் அப் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இதனை தொடர்ந்து இன்னும் பல விடயங்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் மார்ச் 1 முதல்,“சிம் பைண்டிங்” (SIM Binding) என்ற புதிய ஒழுங்குமுறை செயல்படுவதாக தொலைத்தொடர்பு துறை (DoT) அறிவித்துள்ளது.
இதன்படி, வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் செயலிகள் மொபைல் எண்ணுடன் நேரடியாக இணைக்கப்பட்ட சிம் கார்டில் மட்டுமே செயல்படும்.
தற்போதைய முறையில், சிம் கார்டு அகற்றப்பட்டாலும் இணையம் மற்றும் டெஸ்க்டாப் சாதனங்களில் செயலிகள் தொடர்ந்தும் இயங்குவதைக் காட்டிலும் இது ஒரு பெரிய மாற்றமாகும்.

அதாவது, சிம் கார்டு மாற்றப்பட்டால், அகற்றப்பட்டால், அல்லது செயலிழந்தால், அந்த மெசேஜிங் கணக்கு அசல் சிம் மீண்டும் செருகப்பட்டு அங்கீகாரம் செய்யப்பட்ட வரை செயல்படாது.
இந்த புதிய விதிமுறை “linked devices” (இணைக்கப்பட்ட சாதனங்கள்) க்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இணையம் (Web) மற்றும் டெஸ்க்டாப் பயன்பாட்டில் உள்ளவர்கள் அவசரமாக லாக்-அவுட் செய்யப்படலாம் மற்றும் மீண்டும் QR கோடு அல்லது OTP மூலம் அங்கீகாரம் செய்ய வேண்டியிருக்கும்.
இதன் மூலம் அலுவலக அமைப்புகள், வீட்டு மடிக்கணினிகள் உள்ளிட்ட பல சாதனங்களில் ஒரே கணக்கைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பெரும் மாற்றம் ஏற்படும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |