அதிக பேரழிவை ஏற்படுத்தும் 3ஆவது வகை கொரோனா கண்டுபிடிப்பு
பிரேசில் நாட்டில் மூன்றாவது வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் பொது மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இது பொது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஏற்கெனவே பரவி வரும் வைரஸை விட வேகமாக பரவக்கூடிய புதிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டது.
பிரிட்டனில் கண்டறியப்பட்ட இந்த புதிய கொரோனா வைரஸுக்கு VUI 202012/1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது புதிய வகை கொரோனா வைரஸ் அல்ல என்றும், மரபியல் மாற்றம் மட்டுமே அடைந்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் பரவும் முறையில் எவ்வித மாற்றமும் இல்லை.
ஆனால், பரவும் வேகம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து புள்ளி விவரத்தின்படி பழைய வைரஸ் நோயை பரப்பும் வீதம் 1.1ஆக இருந்தது. ஆனால், உருமாறிய வைரஸ் 1.5 முதல் 1.7 சதவீதம் வரை நோயை பரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வேரியண்ட் 30 சதவீதம் அதிக மரண அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா, சுமார் 50 நாடுகளில் பரவியுள்ளது.