காலில் விழுந்த பாட்டியின் ஆசையை நிறைவேற்றுவாரா எழில்! திக் திக் நிமிடங்களுடன் நகரும் கதைக்களம்
பாக்கியலட்சுமி சீரியலின் இயக்குநர் நாளுக்கு நாள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலின் ரீச்
பிரபல தொலைகாட்சியில் ஒளிப்பாக்கி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நாளுக்கு நாள் பரபரப்பாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியல் ஆரம்ப காலக்கட்டத்தில் குடும்ப வாழ்க்கை பற்றிய கதையாக நகர்ந்துக் கொண்டிருந்ததால் மக்கள் மத்தியில் நினைத்த வரவேற்பை பெறாமல் வில்லை.
மாறாக இதில் முதலாவது திருப்பமாக கோபியிற்கும் ராதிகாவிற்கும் இரண்டாவது திருமணம் இடம் பெற்றது.
மேலும் பாக்கியலட்சுமியில் மற்றைய கதாபாத்திரங்களை விட பாக்கியா கதாபாத்திரத்திற்கு அதிகமான சீன்கள் இருக்கிறது.
இந்த சீன்களை கலக்கி இல்லத்தரசிகளின் ஆதரவைப் பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரித்திகா, லட்சுமணன், நேகா மேனன்,ரேஷ்மா ஆகியோர் தங்களின் முழுப்பங்களிப்பை போட்டு நடித்து வருகிறார்கள். இதனால் பாக்கியலட்சுமி சீரியலின் ரீச்சும் அதிகரித்து வருகிறது.
சவால் விட்ட எழிலின் வாழ்க்கை மாற்றப்போகும் பாட்டி
இந்நிலையில் கோபியின் வீட்டிலிருந்த பெயரை பாக்கியலட்சுமியாக மாற்றியதால் கோபிக்கு கோபம் வந்து எழிலை அடிக்கச் சென்றுள்ளார். இதனால் கோபியின் அவர் கட்டிய வீட்டில் யாரும் இருக்கக்கூடாது என அனைவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியிருக்கிறார்.
இந்த வீட்டை விற்க போவதாக கூறும் போது எழில் அந்த வீட்டை வாங்கி பாக்கியலட்சுமியின் பெயரை வீட்டிற்கு முன் நிறுத்தப் போவதாக கோபியிடம் சவால் விட்டுள்ளார்.
இந்த சவாலை ஏற்ற கோபி தன்னுடைய வீட்டில் இருக்க வேண்டும் என்றால் 80 இலட்சம் ரூபாய் கொடுத்து விட்டு இருக்குமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து எழிலால் பணத்தை தயார்ப்படுத்த முடியவில்லை.
இதனால் வர்ஷினியை திருமணம் செய்துக் கொள்ளுமாறு பாட்டி எழிலின் காலில் விழுந்துள்ளார். இதனால் எழில் பாட்டியின் பேச்சைக் கேட்டு வர்ஷினியை திருமணம் செய்துக் கொள்வாரா? அல்லது அமிர்தாவை திருமணம் செய்துக் கொள்வாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.