பிறந்த குழந்தையின் முகத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த தாய்... காரணம் என்ன? நெஞ்சை உருக்கும் சம்பவம்!
மிகவும் வயதான தோற்றத்துடன் பிறந்த குழந்தையின் முகம் புகைப்படமாக இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள கிழக்கு கேப் மாகாணத்தில் வசிக்கும் 20 வயது கர்ப்பிணிக்கு கடந்த மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
இதையடுத்து, பிறந்த குழந்தையானது progeria என்ற அரிய உடல் நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மிக அரிதான நிலை என கூறும் மருத்துவர்கள், குழந்தையின் உடலில் தொடர்ந்து மாறுதல் ஏற்பட்டு வரும் எனவும், முதல் இரு ஆண்டுகளில் அதன் தோற்றம் மிக விரைவாக மாறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
குழந்தை தொடர்பான தகவல் தற்போது கிராமத்தில் புகைப்படமாக வெளியாக, பலர் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதுகுறித்த தாயாருக்கு பிரசவத்திற்கான நேரம் நெருங்கவே, அவர்கள் ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் அளித்துள்ளனர்.
ஆனால், ஆம்புலன்ஸ் சேவை உரிய நேரத்தில் வந்து சேரவில்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த தாயார் குடியிருப்பிலேயே பிள்ளை பெற்றுள்ளார். குழந்தையின் முகம் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பம், அச்சத்தில் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
அதன்பின்னர், குழந்தையை பரிசோதிக்கையில், குழந்தையானது progeria என்ற அரிய உடல் நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அந்த தாயாரிடம் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவரின் பாட்டி தெரிவிக்கையில், பிள்ளை பிறந்ததும் அழவே இல்லை எனவும், விலா எலும்புகள் வழியாக சுவாசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கிராம மக்களின் கேலி கிண்டல்கள் மனதுக்கு வலியை ஏற்படுத்துவதாகவும், அவர்களை தண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனிடையே, இந்த நோயால் உலகம் முழுவதும் இதுவரை 131 பேர் உயிர் வாழ்ந்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.