பீதி மேல் பீதியை கிளப்பும் உருமாறிய கொரோனா வைரஸ்; சுகாதார அமைப்பின் அடுத்த பகீர்!
கொரோனா வைரஸ் உருவாகி ஓராண்டு காலம் நிறைவடைந்த நிலையில், உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது பரவி கொண்டிருக்கிறது. இதனால், இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகள் அந்நாட்டுக்கான தங்களது விமான போக்குவரத்திற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. புதியவகை உருமாறிய கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு, இங்கிலாந்தில் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட ஊரடங்கு விதிமுறைகள் மீண்டும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், இங்கிலாந்து நாட்டின் முதல் முறையாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது 82 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், தென்னாபிரிக்கா அடையாளம் காணப்பட்ட மற்றொரு வகை கொரோனா வைரஸ், 39 நாடுகளில் கண்டறிப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 09 நாடுகளில் பரவி உள்ளது என தெரிவித்துள்ளார்.