புதிய வகை கொரோனாவால் உயிருக்கு ஆபத்தா? பிரித்தானியாவிலிருந்து ஈழத்தமிழ் பெண் மருத்துவரின் பேட்டி
பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவத்தொடங்கியதில் இருந்து பாதிப்புகள் மிகக்கடுமையாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரித்தானியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பிரித்தானியாவின் நிலை குறித்து மருத்துவர் கிருஷ்திகா நகுலேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில், உருமாறிய கொரோனா வைரசுக்கு பின்னர் பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போதைய சூழலில் இதன் பரவல் வீதம் குறைவாக இருந்தாலும் எக்கால கட்டத்திலும் இந்த வீதம் அதிகரிக்க செய்யலாம்.
மிக முக்கியமாக கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு தாமதமாக நடவடிக்கை எடுத்ததும், சுகாதார துறைக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி வருடாவருடம் குறைந்ததும் காரணமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதில் உள்ள சிக்கல்கள், முன்களத்தில் பணியாற்றிய அனுபவம் ஆகியவை பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார்.