இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! மெட்டாவின் புதிய அம்சம்
இன்றைய உலகம் இணையத்தில் மூழ்கியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அதன் வாயிலாக புதுப்புது தளங்களும், செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக ஃபேஸ்புக், X, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பயனர்களுக்கு அதிகளவு பயன்களை அள்ளித் தருவதுடன், புதுப்புது வசதிகளையும் ஏற்படுத்தித் தருகிறது. அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களுக்காக தனியாக ஒரு செயலியை அறிமுகப்படுத்துவது குறித்து மெட்டா நிறுவனம் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதால் அதைப் பயன்படுத்தி அமெரிக்க சந்தையில் இன்ஸ்டாகிராமுக்கு அதிகப் பயனாளர்களைக் கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டம் போடுவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.