ஏன் கழிவறை இருக்கையில் பேப்பர் பயன்படுத்தக்கூடாது? மீறினால்...
வீட்டில் எந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டுமோ இல்லையோ கழிவறை சுத்தமாக இருப்பது மிக அவசியமான ஒன்று. அதாவது, ஒரு மனிதர் ஆரோக்கியமாக இருக்கிறாரா, இல்லையா என்பதை அவர் ஒரு நாளுக்கு எத்தனை முறை கழிவறை செல்கிறார் என்பதை வைத்தே கண்டறிந்துவிடலாம்.
குறைந்தபட்சம் 2 - 3 முறை ஒருநாளுக்கு கழிவறை செல்வது இயல்பு. ஆனால், போகவே இல்லை அல்லது போய்க் கொண்டே இருக்கிறது எனில் உங்கள் குடல், வயிறு போன்ற உறுப்புகளில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்பது அர்த்தம்.
அதேப்போல், கழிவறையில் சுகாதாரம் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். வீட்டின் கழிவறை என்றால் குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்துவார்கள்.
அதுவே வேறு வீடு, அலுவலகம், மால் போன்ற வெளி பொது இடங்களில் இருக்கும் கழிவறைகளை பயன்படுத்தும் போது, எத்தனை பேர் பயன்படுத்தினார்களோ? என்ற அசௌகரியம் இருக்கும்.
பெரும்பாலும் பொது இடங்களிலும் வெஸ்டர்ன் மொடல் கழிவறை தான் பயன்பாட்டில் அதிகம் இருக்கின்றன. இங்கு கழிவறை பயன்படுத்தும் போது பலர் கழிவறை பேப்பரை இருக்கயில் படர வைத்து பயன்படுத்துவார்கள்.
இந்த முறை, சுகாதாரமானது அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர். கழிவறை இருக்கையில் நம் தோல் பட்டாலே தொற்று ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் தான் பலர் பேப்பரை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், உண்மையில் இதன் காரணத்தால் தான் கிருமிகள் தொற்று அதிகரிக்கின்றன. வெஸ்டர்ன் கழிவறை இருக்கைகள் பொதுவாகவே பாக்டீரியா அதிகம் பரவாத வண்ணம் தான் தயாரிக்கப்படுகின்றன.
ஆனால், நாம் அதன் மீது நாம் படர்த்தும் பேப்பரானது எளிதாக பாக்டீரியாக்களை ஈர்க்கும் தன்மை கொண்டுள்ளதால் நம்மீது தாக்கக்கூடும். இதுமட்டுமின்றி, கழிவறையில் பாக்டீரியாக்கள் என்பது கழிவறை இருக்கையில் மட்டும் தான் இருக்கும் என நீங்கள் எண்ணுவது தவறு.
பொதுவாக ஒருவர் கழிவறை சென்ற பிறகு ஃப்ளஷ் செய்யும் போதே பாக்டீரியாக்கள் கழிவறையில் இருந்து அந்த அறை முழுதும் மிக வேகமாக பரவுகின்றன.