பப்பாளி பழத்துடன் தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்... ஏன்னு தெரியுமா?
பப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதனால் செறிமான கோளாறுகள் மற்றும் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும்.ஆனால் பப்பாளி பழத்தை சாப்பிட உடன் சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன.
பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் அதே வேளை குறித்த சில உணவுகளுடன் சேர்த்து உண்ணும் போது பாதக விளைவை ஏற்படுத்துகின்றது.இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பப்பாளியுடன் சாப்பிடக் கூடாதவை
பப்பாளி சாப்பிட்ட பின்னர் வெள்ளரி சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து காணப்படுவதால் இது வாய்வு, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதக விளைவை கொடுக்கும்.
எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் தக்காளி என இவை அனைத்தும் அமிலத்தன்மை அதிகம் நிறைந்த உணவுகள் பப்பாளி சாப்பிட்ட பிறகு அமிலத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. இது நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளை தோற்றுவிக்கும்.
பால், தயிர், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்றவற்றுடன் பப்பாளி பழத்தை சேர்த்து உண்ணக் கூடாது.
பப்பாளியில் உள்ள என்சைம்கள் பால் பொருட்கள் செறிமானமாவதை கடினமாக்கிவிடும் பப்பாளி செரிமானத்தை சீர்செய்யும் தன்மை கொண்டது தான் ஆனால், பப்பாளி பழத்தை சாப்பிட்ட பிறகு ஏதேனும் பால் பொருட்களை எடுத்துக் கொண்டால், அது செரிமான அமைப்பை பாதிக்கிறது.
பப்பாளி சாப்பிட்ட உடன் பாகற்காய் சாப்பிடவே கூடாது. பப்பாளியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். ஆனால் பாகற்காய் உடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சும்.
இவை இரண்டின் கலவையானது முற்றிலும் வேறுபட்டது. இந்த கலவையானது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |