இந்த 5 பழக்கங்கள் தான் வறுமைக்கு காரணம்... எச்சரிக்கும் கருட புராணம்!
இந்து மதத்தில் கருட புராணத்துக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. காரணம் இதில் இறப்பு பற்றியும், பாவங்களுக்கான தண்டனைகள் குறித்தும் விரிவாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வாழ்வில் எந்த விடயங்களை செய்ய வேண்டும், எதனை ஒருபோதும் செய்யவே கூடாது என்பது தொடர்பிலும் இதில் தெளிவாக விளக்கப்படுட்டுள்ளது.

எனவே கருட புராணத்தில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம், வாழ்க்கையில் பணப்பிரச்சினைகள் இருக்கவே கூடாது என நினைப்பவர்கள் எந்த விடயங்களை தவிர்க்க வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கருட புராணத்தில் ஒருவரது ஏழ்மைக்கும், வறுமைக்கும் வழிவகுக்கும் 5 பழக்கங்கள் குறித்து விஷ்ணு பகவான் குறிப்பிட்டுள்ளார்.

அதனை தவிர்பதன் மூலம் பணத்தின் கடவுளான லட்சுமி தேவியின் முழுமையான ஆசியை பெற்லாம். அதனால் வாழ்வில் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது.
1. குளிக்காமல் அழுக்கு ஆடையில் இருப்பது
இந்து மதத்தில் பணத்தின் கடளாக அறியப்படும் லட்சுமி தேவி சுத்தத்தை விரும்புபவர். தூய்மையான மற்றும் வாசனை நிறப்பிய இடங்களிலேயே லட்சுமி தேவி வசிப்பார். எனவே தான் வாழ்வில் பணத்தட்டுப்பாடு வரவே கூடாது என நினைத்தால், காலையில் எழுந்ததும் குளித்து சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். அழுக்கு ஆடையுடன் இருப்பது வறுமைக்கு வழிவகுக்கும் என கருட புராணம் எச்சரிக்கின்றது.

2. சுத்தமில்லாத சமையலறை
கருட புராணத்தின் பிகாரம் ஒவ்வொரு நாள் இரவும் தூங்கும் முன் சமையலறையில் உள்ள அழுக்கு பாத்திரங்களை கழுவி விட்டு, சமையலறையை சுத்தம் செய்த பின்னரே படுக்கைக்கு செல்ல வேண்டும். அப்படி பசி தீர்க்க உதவிய பொருட்களை அழுக்காக வைத்துவிட்டு உறங்க செல்லும் பழக்கம் லட்சுமி தேசவியின் கோபத்தை தூண்டும் எனவே கடன் தொல்லைகளும் பணத்தட்டுப்பாடும் ஏற்படும்.

3. பிறர் செல்வத்தை அபகரிக்க நினைப்பது
கருட புராணத்தில் மற்றவர்களின் செல்வத்துக்கு ஆசைப்படுவது மிகப்பெரும் பாவமாக கருதப்படுகின்றது. மற்றவர்களின் பணத்தையோ, செல்வத்தையோ அல்லது சொத்தையோ அபகரிக்க நினைப்பவர்கள் வாழ்வில் குறுகிய காலத்திலேயே வெளிவர முடியாத அளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள். இந்த குணம் கொண்டவர்களின் வீட்டில் ஒருபோதும் லட்சுமி தேவி வாசம் செய்ய மாட்டாள்.
4. தாமதமாக எழுவது
பொதுவாகவே வீட்டில் ஒரு நபராவது காலையில் மிகவும் தாமதமாக எழும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். இது அந்த குடும்பத்தின் பொருளாதார நிலையில் பாரிய சரிவை ஏற்படுத்தகூடும் என கருட புராணம் குறிப்பிடுகின்றது. காலையில் தாமதமாக எழும் பழக்கம் வறுமைக்கு வித்திடும்.

5. புறம் பேசுவது
ஒருவர் இல்லாத நேரத்தில் அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் தவறாக கருத்துக்களை பகிர்வதும், பழி சொல்லுவதும் வாழ்வில் திராத பணப்பிரச்சினையை ஏற்படுத்தும்
தவறான வார்த்தைகளை பயப்படுத்துபவர்களையும் புறம் பேசுபவர்களையும் லட்சுமி தேவிக்கு பிடிக்காது.அதனால் அப்படிப்பட்டவர்கள் வாழ்வில் அவர் ஒரு போதும் முன்னேற்றத்தை ஏற்படுத்த மாட்டார் என கருட புராணம் எச்சரிக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |