இன்னும் உங்கள் அம்மா சாகலையா? மாயாவின் தங்கை கொடுத்த சரியான பதிலடி
பிக் பாஸ் போட்டியாளரான மாயாவின் அம்மாவை்க குறித்து நெட்டிசன்கள் விமர்சித்த நிலையில் அதற்கு தங்கை சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 74 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 4 வாரங்கள் இருக்கும் நிலையில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் ஆரம்பமாகியுள்ளது.
ஆதலால் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் அரிய புகைப்படங்களை நெட்டிசன்கள் தேடி பிடித்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மாயாவின் குடும்பம்
பிக் பாஸில் தற்போது போட்டியாளராக கலந்து கொண்டுள்ள மாயா ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ளார். பின்பும் பல முன்னணி நடிகர்களுடன் பல ஆண்டுகளாக இணைந்து நடித்துள்ளார். இவர் மேடை கலைஞராகவே தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
நேற்றைய தினத்தில் மாயாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கருத்தை பெற்றது. இந்நிலையில் இப்புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள் மாயாவின் அம்மாவை மோசமாக பேசியுள்ளார்.
சிலர் நலம் விசாரித்ததற்கு மாயாவின் சகோதரி நன்றாக இருக்கின்றார் என்றும் விரைவில் டிவியில் அனைவரையும் சந்திப்போம் என்று பதில் அளித்தார். இதனை அவதானித்த ரசிகர்கள் விரைவில் Freeze டாஸ்க் வரவுள்ளதாக கூறி வருகின்றனர்.
மற்றொருவர் இந்த கருத்திற்கு கீழே இன்னுமா உங்க அம்மா சாகாமல் இருக்கின்றார் என்று கருத்து தெரிவித்த நிலையில், இதற்கு மாயாவின் சசோதரி... இந்த வன்மம் தேவையா? எங்களுடைய தாயைப் பற்றி பேசும்போது உன்னுடைய தாயை பற்றி நினைத்துப் பார்த்தாயா? நிகழ்ச்சியில் கெட்டவர்களாக காட்டப்படுபவர்கள் வெளியே நல்லவர்களாக இருக்கலாம்.
உள்ளே நல்லவர்களாக இருக்கும் நபர்கள் வெளியே கேடுகெட்டவர்களாகவும் இருப்பார்கள். 20 கமெராக்கள் காட்டும் காட்சியில் 20 சதவீதம் மட்டும் தான் உண்மை... இந்த வன்மத்தை போட்டியாளர்களுக்கு போடும் ஓட்டுகளில் காண்பியுங்கள் என்று அழுத்தமாக கூறியுள்ளார்.
சிலர் மாயாவின் விளையாட்டு பிடிக்கவில்லை என்றால் மாயாவை வேண்டும் என்றால் விமர்சிக்கலாம். ஆனால் அவருடைய குடும்பத்தை எப்படி இந்த மாதிரி வார்த்தைகளால் பேச முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |