படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம்
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷை, நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் சந்தித்துள்ளார்.
நடிகர் நெப்போலியன்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்த நடிகர் நெப்போலியன் தற்போத அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதுநெல்லு புது நாத்து படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தனது நடிப்பினாலும், உயரமான உடலமைப்பைக் கொண்டு வில்லனாகவும் கலக்கினார்.
சினிமா மட்டும் இன்றி பாடகராகவும் தன்னை நிரூபித்த இவர், அரசியலில் திமுக சார்பில் போட்டியில் போட்டியிட்டு எம்பி-யானார்.
பின்பு மத்திய அமைச்சராகவும் பதவியில் இருந்த இவர், ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவரது மூத்த மகன் தனுஷிற்கு சிறுவயதிலேயே தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்றார்.
மகனின் திருமணம்
மகனின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன் அங்கேயே சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி செட்டில் ஆகியுள்ளார்.
அவ்வப்போது இந்தியா வந்து செல்கின்றார். சில மாதங்களுக்கு முன்பு மூத்த மகன் தனுஷிற்கு ஜப்பானில் கோலாகலமாக திருமணம் செய்து வைத்தார்.
திருமணம் தொடர்பான காணொளி இணையத்தில் அதிகமாக அவதூறு பரப்பும் காணொளிகள் வெளியாகியது. பின்பு நெல்லை காவல்நிலையத்தில் நெப்போலியன் புகார் அளித்த நிலையில், காணொளிகன் நீக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் பரிதாபங்கள் யூடியூப் சேனல் கோபி சுதாகர் தனுஷை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
ஆனால் குறித்த காட்சியில் நெப்போலியன் மருமகள் இல்லாமல் உள்ளதுடன், தனுஷும் எலும்பும், தோலுமாக காணப்படுகின்றார். இதனால் ரசிகர்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.
நெப்போலியன் கருத்து
எங்கள் முத்த மகன் தனுஷ்க்கு மிகவும் பிடித்தவர்கள் என்பதால் எங்கள் வீட்டிற்க்கு அழைத்திருந்தேன். எனது அழைப்பை ஏற்று எங்கள் வீட்டிற்க்கு வருதை தந்து தனுஷூக்கு மகிழ்ச்சியையும், எங்களுக்கு மன நிறைவையும் தந்தார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் மாதம்பட்டி ரங்கராஜ் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள நெப்போலியன், அன்புள்ள நண்பர்களே, நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த வாரம் அமெரிக்காவின் டென்னசி நாஷ்வில்லில் நடந்த எனது நண்பரின் மகனின் திருமணத்திற்கு வந்தார். அவர் எங்கள் வீட்டிற்கு வந்து தனுஷ் மற்றும் எங்கள் அனைவரையும் சந்தித்தார் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், உங்கள் திருமணத்திற்கு என்னால் சமைக்க முடியவில்லை. ஆனால் நிச்சயத்திற்கு சமைத்தோம். நீங்கள் சாப்பிட்டீங்களா என்று கேட்க, அவர் இன்றும் உங்கள் சமையலை டேஸ்ட் செய்யவே இல்லை என்று நெப்போலியன் மனைவி கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW You May Like This Video |