kara chutney: நெல்லூர் ஸ்பெஷல் கார சட்னி... இப்படி செய்து அசத்துங்க
பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் சட்னிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. இட்லி தோசைக்கு சட்னி சாப்பிடுகிறவர்களை விட சட்னிக்காகவே சாப்பாட்டை சாப்பிடுகின்றவர்கள் அதிகம்.
அப்படி சட்னி பிரியர்களை குஷியாக்கும் அளவுக்கு அசத்தல் சுவையில் நெல்லூர் ஸ்பெஷல் கார சட்னியை எப்படி எளிமையாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காஷ்மீரி மிளகாய் - 6
வரமிளகாய் - 15
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 6 பல்
தக்காளி - 1 (நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
நாட்டுச்சர்க்கரை - 1/2 தே.கரண்டி
தாளிப்பதற்கு தேவையானவை
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
சீரகம் - 1/4 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் காஷ்மீரி வரமிளகாயை எடுத்து சுடுநீர் ஊற்றி சிறிது நேரம் ஊறவிட வேண்டும். பின்பு வரமிளகாயையும் சுடுநீரில் சிறிது நேரம் ஊற வைத்துள்ள கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் ஊற வைத்த காஷ்மீரி வரமிளகாய் மற்றும் வரமிளகாயை போட்டு, அத்துடன் மிளகாய் ஊற வைத்த நீரை 1/4 கப் அளவுக்கு ஊற்றி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, தக்காளியையும் சேர்த்து சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு மென்மையான பதத்தில் அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுதை அந்த தாளிப்பில் சேர்த்து 4-5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான நெல்லூர் கார சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |