விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 'கத்தி' பட வில்லன்... அதிர்ச்சியளிக்கும் காரணம்
தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படத்தில் கார்ப்பரேட் வில்லனாக நடித்து பிரபல்யம் ஆனவர் தான் நடிகர் நீல் நிதின் முகேஷ்.
நீல் நிதின் முகேஷ்
இவர், மாதவனுடன் இணைந்து நடித்த 'ஹைசாப் பராபர்' என்ற படம் கடந்த ஜனவரி 24ஆம் திகதி திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தனது புதிய ஹிந்தி படத்தின் படப்பிடிப்பிற்காக சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றபோது அங்குள்ள நியூயார்க் விமான நிலையத்தில் இவரது பாஸ்போர்ட்டை பார்த்த அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
அவர் தோற்றத்தில் பார்ப்பதற்கு இந்தியர் போல் இல்லையே என காரணம் கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளார்கள்.
சில மணிநேரம் தடுத்து வைக்கப்பட்ட நீல் நிதின் முகேஷ்க்கு தன் தரப்பில் இருந்து பதில் பேசுவதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை.
பல மணி நேரத்திற்கு பிறகு வந்து 'நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?' என கேட்ட போது தான் என்னை பற்றி googleல் தேடி பாருங்கள் என நீல் கூறியிருக்கின்றார்.
கூகுளில் சர்ச் பண்ணி பார்த்தவர்கள் நீல் நிதின் முகேஷை விடுவித்துள்ளார்கள். நீல் நிதின் முகேஷ் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் பரம்பரையில் இருந்து வந்தவர்.
அவரது தாத்தா, புகழ்பெற்ற முகேஷ், இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் அவரது தந்தை நிதின் முகேஷும் ஒரு பின்னணி பாடகராக குறிப்பிடத்தக்க அடையாளத்தை உருவாக்கொண்டவர். இருப்பினும் நீல் தோற்றத்தில் இந்தியர் போல இல்லை என்கிற காரணத்திற்காக விமான நிலையத்தில் இப்படி சிக்கலை அனுபவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |