கோடீஸ்வரராக்கும் அற்புத பொருள்.... இது இருந்தால் வாழ்நாளில் பண பிரச்சினை இருக்காது?
மஞ்சள் மங்களகரமான பொருள் மட்டும் இல்லை பல நிதிப் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும்.
மஞ்சள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிடத்தின் படி, மஞ்சள் மங்களத்தை தரக் கூடிய குரு பகவானுடன் தொடர்புடையது. எனவே எப்போதும் ஒரு துண்டு மஞ்சள் நம்முடன் வைத்திருப்பதால் நம்முடைய வலிமையை அதிகரிக்கும்.
குரு பலம்
மஞ்சள் மங்கலகரமான மஞ்சளை கையில் வைத்துக் கொண்டு குரு பகவானை பிரார்த்தனை செய்வதும், குரு மந்திரத்தை உச்சரிப்பதாலும் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும்.
குரு பலம் குறைவாக இருக்கும் ஜாதக அமைப்பைப் பெற்றவர்கள் நல்ல குரு அருளைப் பெற அவர்கள் வியாழக்கிழமை தோறும், பச்சை மஞ்சள் துண்டு ஒன்றை சிறு மஞ்சள் துணியில், கட்டி கையில் கட்டிக் கொள்வதால் குரு பலம் கூடும்.
பணம் சேர
வியாபாரத்தில் தொடர்ந்து சிக்கலில் இருந்தால், வளர்பிறையில் வரக்கூடிய முதல் வியாழக்கிழமை 'ஓம் நமோ பகவத்தே வாசுதேவய நமஹா' என்று 108 முறை சொல்லி தியானிக்க வேண்டும்.
ஒரு மஞ்சள் துணியில் கருப்பு மஞ்சள், கோமதி சக்கரம் ஆகியவை கட்டி அதை கருப்பு துணியில் கட்டி வைக்க வேண்டும்.
இது உங்கள் வியாபாரத்தில் உள்ள அனைத்து சிக்கல்களையும் நீக்கும். ஒரு வெள்ளி குங்கும சிமிலில் கொஞ்சம் மஞ்சள் மற்றும் குங்கும பூ சேர்த்து அதை வெள்ளிக்கிழமைகளில் வீட்டு பூஜை அறையில் உள்ள மகாலெட்சுமி தேவியின் பாதத்தில் வைத்து பூஜை செய்து, நாம் பணம் வைக்கக் கூடிய பெட்டியில் வைக்கவும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அதை எடுத்து லெட்சுமி தேவியின் முன் வைத்து பூஜிக்கவும். அப்படி செய்து வர வீட்டில் லெட்சுமி கடாட்சம் கிடைக்கும். செல்வ நிலை அதிகரிக்கும்.
இனி பணப்பிரச்சியை வாழ்நாளில் உங்களை எட்டி கூட பார்க்காது.