நீயா நானாவில் அசிங்கப்படுத்திய மனைவி! கண்ணீர் விட்ட கணவர் உடைத்த உண்மை
கடநத சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் நடைபெற்ற சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் பரபரப்பில் ஆழ்த்தியது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சியி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் கடந்த வாரம் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் வேலைக்கு செல்லும் மனைவி, வீட்டில் இருக்கும் கணவர் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதில் தந்தை ஒருவருக்கு இடையிலேயே கோபிநாத் பரிசு கொடுத்து அனைவரையும் வாயடைக்க வைத்தார்.

மனைவியை புகழ்ந்த கணவர்
மனைவியை குறித்து நேர்காணலில், மனைவியின் பதில், எதிர்மறையான கருத்துக்களை பெற்றது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கணவர், "மற்றவர்கள் சொல்வது போல் ஒன்றும் என் மனைவி கிடையாது. நாங்கள் "Arrange Marriage" தான் செய்து கொண்டோம். ஆனால், பார்க்கும் அனைவரும் நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டதாக கருதுவார்கள்.
ஏனென்றால், அந்த அளவுக்கு நாங்கள் ஜாலியாக இருப்போம். யாரவது கேட்டால் கூட, ஆமாம் காதல் திருமணம் என்றும் கூறி விடுவேன்" என கூறினார்.
அதே போல, அவரது மனைவியும் தாங்கள் இருவரும் அடிக்கடி வீட்டில் ஜாலியாக பேசிக் கொண்டிருப்போம் என்றும், எந்த விஷயமாக இருந்தாலும் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், மிகவும் நிதானமாக எடுத்துக் கொண்டு அன்பு காட்டிக் கொண்டிருப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதன் பின்னர் மீண்டும் பேசிய அந்த கணவர், "என் மனைவிக்கு அது புரியாமல் போனதன் காரணம் ஏனென்றால், அவர் பள்ளியில் முதல் மார்க் எடுப்பவர். இதனால், நான் ஏன் பிராக்ரஸ் ரிப்போர்ட் பார்க்கிறேன் என்று அவருக்கு புரியவில்லை.
ஒட்டுமொத்தத்தில், எனது ஃபீலிங்ஸ் அவருக்கு புரியவில்லை. நானும் அவரிடம் ஏன் இத்தனை நேரம் பிராக்ரஸ் ரிப்போர்ட் பார்க்கிறேன் என்பதை சொன்னதில்லை. அவரும் என்னிடம் ஏன் என்றும் கேட்டதில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் பேசிய அவரது மனைவி, "கோபிநாத் சார் சொன்னது எனக்கு நன்கு புரிந்தது. மகள் 92 மதிப்பெண் எடுக்கும் போது, இன்னும் 8 மார்க்குகளை வாங்கி இருக்கலாமே என தோன்றும்.
ஆனால், எனது கணவருக்கு அதுவே பெரிதாக இருக்கிறது என்பதே எனக்கு அப்போது தான் தெரிந்தது" என கூறினார். இரண்டு சிறுநீரகம் செயலிழந்துவிட்ட நிலையில் வாரத்திற்கு இரண்டு முறை டயாலிஸிஸ் செய்வதாக சீனிராஜன் கூறியுள்ளார்.
இவரது குழந்தை குணாஷிலி பேசுகையில், எனது அப்பா வீட்டில் அதிகமாக பேசமாட்டார் என்றும் ஆரம்பத்தில் என்ன பேசுவது என்று யோசித்தார்.. நான் தான் மனதில் தோன்றுவதை பேசுங்கள் என்று கூறி பேச வைத்ததாக கூறியுள்ளார்.