க்ரீன் டீ குடித்த இளம்பெண்... காண்டான கோபிநாத்! இனியும் இந்த பிழையை செய்யாதீர்கள்
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி 15 ஆண்டுகளை கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியை கோபிநாத் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். வித்தியாசமான தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சி சமூகவாசிகளிடம் பேசு பொருளாக மாறியுள்ளது.
இதில் நவீன ஆரோக்கிய உணவுமுறையை பின்பற்றுபவர்கள் மற்றும் விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
இதையொட்டி கிரீன் டீயை சுவைக்க இளம் பெண் ஒருவருக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அவர் முகச்சுளிப்புடன் அதை செய்ய, அதை கோபிநாத் விமர்சித்துள்ளார்.
க்ரீன் டீயை விட அதிகமான ஆன்டி ஆக்சிடண்ட் காணப்படும் நமது பாரம்பரிய உணவுகளான இஞ்சி, புதினா, நெல்லிக்காய் குறித்து மருத்துவரின் விளக்கமும் சிறப்பாக காணப்பட்டது.
நாகரீக மாற்றத்தால் வளர்ந்த உணவுகள் ஆரம்பத்தில் ஆரோக்கியமாக தான் தெரியும் எனினும் அது ஆபத்தான நோய்களை எமக்கு கொடுத்து விட்டு செல்லும் என்பது மறுக்க முடியாத உண்மை.
இனியும் உணவு விடயத்தில் பிழை விடாதீர்கள். பாரம்பரிய உணவு ஆரோக்கியத்தின் ஊற்றாகும்.