Neeya Naana: Neeya Naana: நவீன சினிமாவின் தொடக்கம்... மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கிய படங்கள், அவர் கற்றுக்கொடுத்த பாடங்கள் குறித்து அருமையாக விவாதிக்கப்பட்டுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவைக் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. கிராமத்து மண்வாசனையை நகரத்துக்கு எடுத்து வந்தது மட்டுமின்றி, நவீன சினிமாக்களின் தொடக்கமாகவும் இருந்துள்ளார்.

அவர் இயக்கிய படங்கள் அத்தனையும் அர்த்தமுள்ள கதையை இன்றும் கூறுகின்றது. பெண் சிசு கொலையை கருத்தம்மா படத்தில் இவர் கூறிய விதம் சற்று வித்தியாசமானது.
ஆனாலும் இவரது படத்தின் கதைகள் மக்களின் மனதில் தற்போதும் ஓயாமல் சினிமா போன்று ஓடிக்கொண்டே தான் இருக்கின்றது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |