Neeya Naana: அப்பாவின் பணத்திற்கு வலைவீசிய மகன்! அரங்கத்தில் கோபிநாத் கொடுத்த நச் பதில்
நீயா நானா நிகழ்ச்சியில் அப்பாவின் அருமை இப்பதான் புரியுது மகன் மற்றும் அப்பா என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு அப்பாவின் அருமை இப்பதான் புரியுது மகன் மற்றும் அப்பா என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் அப்பாக்கள் மகனிடம் முகத்திற்கு முகம் பார்த்து கூட பேசாமல் அன்பை பரிமாறிக்கொள்ளும் நிலையில், இதனை புரிந்து கொள்ளாத மகன்கள் காலம் கடந்து புரிந்து கொள்கின்றனர்.
அப்பா சேமித்து வைத்திருந்த பணத்தை கேட்ட மகனுக்கு தந்தை கொடுத்த பதில் மட்டுமின்றி, தொகுப்பாளரான கோபிநாத் சரியான பதில் அளித்துள்ளார்.
தற்போதும் தனக்கு முதுகெலும்பாக இருக்கும் அப்பா நீண்ட நாட்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காக மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுமாறு மகன் கூறியுள்ளார். உடனே தந்தையும் சரியென்று கூறியுள்ளார்.
தந்தையை வேலைக்கு செல்ல வேண்டாம் நான் அந்த ஐந்தாயிரம் ரூபாயை தருகின்றேன் என்று கூறிய மகன், அந்த பணத்தை தராமல் இருக்கும் நிலையில், தந்தை போன் செய்யும் போது பணத்திற்காக போன் செய்வதாக பேச்சு எழும்பியுள்ளது. இதற்கும் கோபிநாத் சரியான பதில் அளித்துள்ளார்.
அரங்கத்தில் தனது காதல் திருமணத்திற்கு சம்மதம் கேட்ட மகனுக்கு அப்பா ஏமாற்றத்தை அளித்துள்ளார். அப்பாவின் வார்த்தையால் மகனும் மனம் மாறிய நிலையில், கோபிநாத் காதலித்த பெண்ணை நினைத்து வருத்தப்பட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |