அசிங்கப்படுத்திய தங்கையை தலைகுனிய வைத்த அக்கா! கைதட்டி ரசித்த கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் திருமணத்திற்கு பின்பு அக்கா தங்கை இடையே இருக்கும் உறவை மையமாக வைத்து இந்த வாரம் உரையாடல் நடந்துள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு திருமணத்திற்கு பின்பு அக்கா தங்கையின் உறவு என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
அக்கா தங்கை உறவு என்பது நினைத்தாலே கண்களில் கண்ணீர் வரவழைக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. அம்மாவிற்கு அடுத்து தங்கைக்கு இரண்டாவது அம்மாவாக இருப்பவர் அக்கா தான்.
இங்கு திருமணத்திற்கு பின்பு அக்கா தங்கையின் உறவில் ஏற்படும் விரிசல், பிரச்சினைகள் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் அக்கா தங்கை என்றாலும் காசு பணம் பார்த்து தான் உறவுகளுக்கு உயிர் தருகிறது என்ற சந்தேகம் எழுந்து வருகின்றது.