சாவுக்கு கூட லீவு இல்லையா? நீயா நானாவில் உடைக்கப்பட்ட முதலாளித்துவம்.. கண்கலங்க வைத்த காட்சி!
கம்பனிகளில் சாவுக்கு கூட போக லீவு இல்லை என தொழிலாளியொருவர் நீயா நானாவில் கூறிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நீயா நானா ஷோ
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் இந்த நீயா நானா. இந்த ஷோவில் இரண்டு தரப்பினர்களாக போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்.
பின்னர் சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் அந்த நிகழ்ச்சியில் இறுதியில் வழங்கப்படும்.
தொடர்ந்து இந்த ஷோவை தமிழகம் மட்டுமல்ல பலர் கோடி மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.
முதலாளித்துவத்தின் ஆணவம்
அந்த வகையில் இந்த வார நிகழ்ச்சியில் மக்களின் தொழில் சம்பந்தப்பட்ட விடயங்கள் தான் கலந்துரையாடப்படுகிறது.
இதில் தொழிலாளர்கள் பக்கம் உள்ள ஒருவர், "சாவிற்கு கூட எனக்கு லீவு தரமாட்டாங்கள். இயந்திரத்துடன் இயந்திரமாக தான் வாழ வேண்டும்" என கூறியுள்ளார்.
இதனை கேட்ட முதலாளித்துவ தரப்பு அப்படி தர முடியாது. அப்படி கொடுத்தால் அன்றைய நாளுக்கான சம்பளம் வெட்டபடும் என கூறியுள்ளார்கள்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.