Neeya Naana: முக்கிய குணத்தை ஏன் தொலைக்கிறீர்கள்? ஆவேசத்தில் கண்கலங்கிய மனைவி! கோபிநாத் பதில்
நீயா நானா நிகழ்ச்சியில் மேக்கப் போடும் ஆண்கள் மற்றும் அதனை கேள்வி கேட்கும் மனைவிகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் மேக்கப் போடும் ஆண்கள் மற்றும் அதனை கேள்வி கேட்கும் மனைவிகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் கணவர்கள் தங்களது இயற்கையான அழகை மறைத்து இவ்வாறு மேக்கப் போடுவதை பார்த்த மனைவி ஒருவர் அரங்கத்தில் ஆவேசமடைந்து கண்கலங்கியுள்ளார்.
நபர் ஒருவர் நெஞ்சில் இருக்கும் முடியை எடுத்து அலம்பல் செய்துள்ளார். இதற்கு அவர் கூறும் காரணத்தை கேட்ட கோபிநாத் கொந்தளித்து அவருக்கு பாடம் கற்பித்துள்ளார்.
40 வயதில் கணவர் 40 வயது மாதிரி தெரிய வேண்டும்... அப்பொழுது தான் வெளியே மரியாதை இருக்கும் என்கிறார் மனைவி. இதற்கு கணவர் அவர்களின் அப்பா அப்படியிருந்தால் யூத் என்று கூறுகின்றனர்.
மற்றொரு கணவர் காதில் கம்மல் போட்டுக் கொள்ள ஆசைப்படுகின்றார். இதற்கு மனைவி இப்பவே ரவுடி மாதிரி இருக்க... கம்மல் போட்டால் பொறுக்கி மாதிரி இருப்பீர்கள் என்று கூறிவதாக புலம்பியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |