Neeya Naana: ஆன்லைன் பண மோசடியில் லட்சங்களை பறிகொடுத்த நபர்கள்... நடுநடுங்கிய கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் பணம் இழந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் ஆன்லைன் மூலம் பணம் இழந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பண மோசடியில் சிக்கி லட்சக்கணக்கான பணத்தை இழந்த நபர்களின் குமுறல் பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
கிரெடிட் கார்டு மூலமாகவும், ஆன்லைன் விளம்பரம் மூலமாகவும் 3 லட்சம், 4 லட்சம் என்று பணத்தை பெறும்பாலான நபர்கள் இழந்துள்ளனர்.
பெண் ஒருவரின் பெயரில் மோசடிகாரர்கள் அவர்களாகவே ஏடிஎம் கார்டு வாங்கி கணக்கிலிருந்து மொத்த பணத்தையும் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் என்எஃப்சி ரீடர் கொண்டு வெறும் 5 நிமிடத்தில் ஒருவரது கணக்கை கைமாற்றி பணத்தை எடுக்கும் நிலையையும் இளைஞர் ஒருவர் விளக்கியுள்ளார்.
நபர் ஒருவர் வாடிக்கையாளரிடம் ஏமாற்றுவதற்கு மனது இல்லாமல் அவரைக் காப்பாற்றியுள்ளதையும் அரங்கத்தில் கூறியுள்ளார்.
மேலும் வெறும் 6 இலக்க எண்களை அறிந்து கொண்டாலே மொத்த பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி கோபிநாத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |