Neeya Naana: பிள்ளைகளின் காதல் தோல்வி... கண்ணீரில் மீள முடியாமல் தவிக்கும் பெற்றோர்
நீயா நானா நிகழ்ச்சியில் காதல் தோல்வியில் இருக்கும் பிள்ளைகள் மற்றும் அவர்களை மீட்க நினைக்கும் பெற்றோர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் காதல் தோல்வியில் இருக்கும் பிள்ளைகள் மற்றும் அவர்களை மீட்க நினைக்கும் பெற்றோர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

இதில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் காதல் தோல்வியை நினைத்து கண்ணீர் வடித்துள்ளனர். பிள்ளைகளை விட பெற்றோர்களே அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பதை இந்த காணொளியில் காண முடிகின்றது.
பெண் ஒருவர் ஒன்பது மாதத்திற்கு முன்பு மகிழ்ச்சியாக இருந்த நிலையில், தற்போது கண்ணீரில் மட்டுமே வாழ்ந்து வருகின்றார். அவரது கண்ணீர் ஒட்டுமொத்த அரங்கத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |