நீயா நானாவில் ரவுண்டு கட்டி புரோட்டா சாப்பிட்ட பெண்கள்... கோபிநாத்தையே ஏங்க வைத்த தருணம்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் எது தமிழ்நாட்டின் Food City? என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு எது தமிழ்நாட்டின் Food City? என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, தங்களது மாவட்டத்தில் இருக்கும் பிரபலமான உணவுகளை குறித்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பெண்கள் புரோட்டாவை தனது ஸ்டைலில் சாப்பிட்டு அசத்தியுள்ளனர். இதனை அவதானித்த கோபிநாத் சீக்கிரம்மா எனக்கே பசிக்குது என்று கூறி அரங்கத்தை சிரிக்க வைத்துள்ளார்.
அரங்கத்தில் பெண்கள் புரோட்டா சாப்பிட்ட விதம் பார்வையாளர்களையே எச்சில் ஊற வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |