Neeya Naana: அரங்கத்தில் மனைவிக்கு முதியவர் கொடுத்த முத்தம்! கோபிநாத்தின் ரியாக்ஷனைப் பாருங்க
நீயா நானா நிகழ்ச்சியில் சண்டை போடும் மாமனார், மாமியார் மற்றும் சமாதானப்படுத்தும் மருமகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் சண்டை போடும் மாமனார், மாமியார் மற்றும் சமாதானப்படுத்தும் மருமகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இங்கு வயதான தம்பதிகள் இருவரும் 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். குறித்த கணவர் அரங்கத்தில் வேதனையுடன் கூறியுள்ளார்.
வீட்டில் துணி மடித்து வைப்பதில் கூட ஒரு திருப்தியை எதிர்பார்க்கும் மனைவி கணவர்களிடையே சண்டை ஏற்படுகின்றது. நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போது மாமனார் மூச்சுப்பயிற்சி என்று செய்யும் அட்டகாசம் தாங்கமுடியவில்லை என்று மருமகள் கூறுகின்றார்.
அரங்கத்தில் மனைவிக்கு முத்தம் கொடுத்து திருமண நாள் வாழ்த்து கூறிய தம்பதியைப் பார்த்து கோபிநாத் வியந்து போயுள்ளார்.
ஆணிற்கு ஏன் மனைவியே உலகமாகிறாள் என்ற கோபிநாத்தின் கேள்விக்கு நபர் ஒருவர், ஒரு பெண் ஆணின் துணையின்றி நீண்ட காலம் வாழ முடியும். ஆனால் ஆண் பெண்ணின் துணையின்றி நீண்ட நாட்கள் வாழமுடியாது என்று கூறி கலங்க வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |