Neeya Naana: அம்மாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் பிள்ளைகள்! கண்ணீர் வடிக்கும் பெற்றோர்
நீயா நானா நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ள சொல்லும் பிள்ளைகள் மற்றும் மறுமணத்திற்கு தயங்கும் Single Parent என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் திருமணம் செய்து கொள்ள சொல்லும் பிள்ளைகள் மற்றும் மறுமணத்திற்கு தயங்கும் Single Parent என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

இன்றைய காலத்தில் கணவர் இல்லாமல் பிள்ளைகளை வளர்க்கும் அம்மாக்கள் அதிகமாகவே இருக்கின்றனர். இவ்வாறு தனியாக வாழ்பவர்கள் தங்களது வாழ்க்கையைக் குறித்து கவலைப்படுவதில்லை.
பிள்ளைகளின் வாழ்க்கையை நினைத்தே தனது வாழ்க்கையையும் கழித்து விடுகின்றனர். ஆனால் பிள்ளைகளின் திருமணத்திற்கு பின்பு அவர்கள் தனியாகவே நிற்கும் நிலை உள்ளது.
“மக்களின் அன்பை பணத்தால் வாங்க முடியாது” - பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குமரனின் நெகிழ்ச்சி பதிவு
இந்நிலையில் சிங்கில் பெற்றோராக இருக்கும் அம்மாக்களை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளச் சொல்லும் பிள்ளைகளின் கருத்துக்கள் அரங்கில் ஒலித்துள்ளது.
ஆனால் பெற்றோர் மறுமணம் செய்வதற்கு விருப்பம் இல்லாமல் சமூகத்தை நினைத்து பின்வாங்கும் நிலையில் உள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |