மாமியராக மாறி சித்திரவதை செய்யும் அதிகாரிகள் - கழுவி ஊற்றும் ஊழியர்கள்- நடுவில் சிக்கிய கோபிநாத்!
மாமியராக மாறி சித்திரவதை செய்யும் அதிகாரிகளை இன்றைய தினம் நீயா நானாவில் கழுவி ஊற்றியுள்ளனர்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் இருந்து வருகின்றார்.
பல வருடங்கள் கடந்த நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத் அளவிற்கு யாரும் தொகுத்து வழங்காத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி மவுசு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்த வாரம் கொடுமை செய்யும் பெண் தலைமை அதிகாரிகள் மற்றும் அவர்களிடம் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் என இரு தரப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.
வெளுத்து வாங்கிய ஊழியர்கள்
அதில், சொந்த மாமியரை விட தலைமை பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரிகள் தங்களின் ஊழியர்களை அளவில்லாமல் கொடுமை செய்வதாக ஊழியர்கள் குற்றம் சாடியுள்ளனர்.
மேலும் விடுமுறை எடுப்பது ஊழியர்களின் அடிப்படை உரிமை என்றாலும் அதிலும் தங்களின் அதிகாரத்தை காட்டி எடுக்க விடாமல் பண்ணுகிறார்கள். இப்படி ஏகப்பட்ட முறைப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் கோபிநாத் யாருக்கு சார்பாக இந்த வாதத்தை கொண்டு செல்வார் என சரியாக தெரியவில்லை.
இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் அதிகமாக ஊழியர்களின் கோரிக்கை மட்டுமே காட்டப்பட்டுள்ளன.
ஊழியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகள் சார்பில் என்ன மாதிரியான பதில்கள் வரும் என்பதனை பொறுத்திருந்து காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |