தமிழர்கள் என்றாலே குடிகாரர்களா? நீயா நானாவில் பரபரப்பு விவாதம்- டென்ஷனான கோபிநாத்
பிரபல தொகுப்பாளரான கோபிநாத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி நீயா நானா, காரசாரமான தலைப்புகளில் இரு துருவங்களாக நிற்கும் மக்களின் பிரச்சனைகளை அலசி ஆராய்வதே மையக்கரு.
இந்நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக கோபிநாத் மிக சிறப்பான நடத்தி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்த வாரம் சிறு தொழில் முதலாளிகள் VS தமிழக தொழிலாளர்கள் பற்றிய விவாதம் நடந்தது.
இதில், தங்களுக்கு உள்ள பிரச்சனைகள் குறித்து இரு தரப்பினரும் பேசினர், சமீபகாலமாக தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வருவதையும், வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளுக்கு கூட விடுமுறை கிடைப்பது கடினம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
இதில் நபர் ஒருவர் பேசுகையில், திருப்பூர் 1500 ரூபாய் சம்பளமாக கிடைக்கப்பெற்றாலும், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலைக்கு வருகிறார்கள் என்றும், குடித்துவிடுகிறார்கள் எனவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பெரும்பாலானர்கள் அப்படியில்லை, ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த தமிழர்களையும் குறைசொல்வது நல்லதல்ல என்று பேசினார்கள்.
குடிப்பழக்கம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 9வது இடத்தில் இருக்கிறது என கூறியபோது, அதிலும் திருப்பூர் முதலிடம் என கூற, எதன் அடிப்படையில் இப்படி பேசுகிறீர்கள் என உடனடியாக புள்ளிவிபர பட்டியலும் காட்டப்பட்டது.
அந்நபர் பேசிய காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியானதை தொடர்ந்து, பல மக்களும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.