காதலிக்க நடுங்கும் ஆண்களை வறுத்தெடுக்கும் இளம்பெண்கள்.. ஏற்றி விடும் கோபிநாத்- காரசாரமான வாதம்
காதலிக்க நடுங்கும் ஆண்களை இந்த வாரம் நீயா நானாவில் இளம் பெண்கள் வறுத்தெடுத்துள்ளனர்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் இருந்து வருகின்றார்.
பல வருடங்கள் கடந்த நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத் அளவிற்கு யாரும் தொகுத்து வழங்காத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி மவுசு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்த வாரம் காதலிக்க பயம் கொள்பவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் வாதம் துவங்கியுள்ளது.
வசமாக சிக்கிய ஆண்கள்
அதில் ஒரு பெண், “ காதலிப்பதை சில ஆண்கள் வெளியில் சொல்வதற்கு கூட பயம் கொள்வார்கள்.. ” என முதல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு ஆண், “ காதலிகிறோம் என வெளியில் கூறி விட்டால் அது ஒரு கதையாகவே மாறி விடும்.. அவர்கள் எங்களை காதலிப்பதை எங்களால் நம்ப முடியவில்லை..” என பேசுகிறார்.
ஆனால் “ காதலிப்பதை வெளியில் கூற தைரியம் இல்லாவிட்டால் ஏன் காதலிகிறீர்கள்.” என வாயை அடைக்கும் வகையில் பெண்ணொருவர் பேசியுள்ளார்.
தற்போது இருக்கும் ஆண்கள் பயந்தவர்களாக இருக்கிறார்கள். குடும்பம், சமூகம் என பெண்கள் யோசிக்கும் விடயங்களில் அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள்.
பெண்கள் அப்படியே மாறிவிட்டார்கள், குடும்பம், பெற்றார், வேலை, பணம் இப்படி எதை பற்றியும் யோசிக்காமல் காதலனுக்காகவும் காதலுக்காகவும் நிறைய ஏமாற்றங்களை சந்திக்கிறார்கள்.
இதற்கு ஒரு தீர்வை கோபிநாத் இந்த வார எபிசோட்டில் வழங்குவார் என இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இப்படியாக இன்றைய தினம் நீயாநானாவின் ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |