Neeya Naana: ஒவ்வொரு ராசிக்கும் 2026ம் ஆண்டு எப்படி இருக்கும்? நீயா நானாவில் உண்மையை உடைத்த ஜோதிடர்கள்
நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு ராசிக்கும் 2026 எப்படி இருக்கும்? என்ற தலைப்பில் பிரபலங்கள் மற்றும் ஜோதிடர்கள் இடையே விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் ஒவ்வொரு ராசிக்கும் 2026 எப்படி இருக்கும்? என்ற தலைப்பில் பிரபலங்கள் மற்றும் ஜோதிடர்கள் இடையே விவாதிக்கப்படுகின்றது.

இதில் சீரியல் பிரபலங்கள் மட்டுமின்றி பிக்பாஸிலிருந்து வெளியேறிய போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு எந்தெந்த ராசியினர் உச்சத்திற்கு செல்வார்கள்? EMI யாருக்கு முடியும்? யாருக்கு முடியாது? என பல கேள்விகளை பிரபலங்கள் எழுப்பியுள்ளனர்.
இதற்கு அரங்கத்தில் இருக்கும் ஜோதிடர்கள் தங்களது பதிலை முன்வைத்துள்ளனர். மிகவும் சிக்கலில் காணப்படும் ராசியாக சிம்மம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |