மனகசப்புகளை பகிர்ந்து கொள்ளும் மகள்கள்.. கலகலவென இருந்த நீயா நானாவில் திடீரென தாய் அழுதது ஏன்?
இன்றைய தினம் நீயா நானாவில் மகள் - தாய்மார்கள் அவர்களின் மனகசப்புக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் இருந்து வருகின்றார்.
பல வருடங்கள் கடந்த நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத் அளவிற்கு யாரும் தொகுத்து வழங்காத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி மவுசு எழுந்துள்ளது.
பொறாமைப்படும் மகள்கள்
இந்த நிலையில், இந்த வாரம் இளமையாக இருக்கும் தாய்மார்கள் மற்றும் அவர்களின் மகள்கள் என இரு தரப்பினராக கலந்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில் தாய்மார்கள் பற்றிய கருத்துக்களை மகள்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அதில், “ என்னுடைய அம்மா என்னுடன் வெளியில் வந்தால் அவரை பார்த்து என்னுடைய அக்காவா? தங்கையா? என கேட்பார்கள். அதன் பின்னர் அம்மாக்கள் கொடுக்கும் ரியாக்ஷனை எங்களால் தாங்க முடியவில்லை..” என கூறினார்கள்.
இப்படி கலகலவென கூறிக் கொண்டிருக்கும் பொழுது கோபிநாத் கேட்ட கேள்விக்கு திடீரென தாய் ஒருவர், அம்மா தன்னை விட அழகு என கூறுவதாலும், அம்மாவிடம் அனைத்து விடயங்களை கேட்டு செய் என கூறுவதாலும் தன்னுடைய மகள் தன்னை வெறுப்பதாக கூறி அழுதுள்ளார்.
இதனை தொடர்ந்து வாதம் எப்படி இருக்கும் என்பதனை நிகழ்ச்சியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |