துளிகூட மேக்கப் இல்லாமல் காதலர் விக்கியுடன் நயன்தாரா: மாஸ்கை கழட்ட கோரி ரசிகர்கள் கொடுத்த அன்புத் தொல்லை! இதோ காணொளி
சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நயன்தாரா தனது காதலர் விக்கியுடன் கோவிலுக்கு சென்றுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
நடிகை நயன்தாரா, காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர்.
கோவிலுக்கு வெளியே ஜோடியாக இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அங்கிருந்த ரசிகர்களும் நயன்தாராவின் முகக்கவசத்தினை கழட்டுமாறு அன்புத்தொல்லை கொடுத்து செல்பி எடுத்துக் கொண்டனர்.
அதுமட்டுமின்றி 60 வயது முதியவர் ஒருவர் நயன்தாராவின் தீவிர ரசிகராக இருந்த நிலையில், அவருடன் இரண்டு அடி தள்ளிநின்று நயன்தாரா செல்பிக்கு போஸ் கொடுத்துள்ள காட்சியும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.