பங்களாவை ஸ்டுடியோவாக மாற்றிய நயன்தாரா விக்னேஷ் சிவன்: ஆடம்பரத்தின் ஒரு பார்வை
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள பங்களாவை ஸ்டூடியோவாக மாற்றி உள்ளனர்.
நயன்தாரா விக்னேஷ்
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அவர்களின் தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள பங்களாவை ஆடம்பரமான ஸ்டுடியோ ஒன்றாக உருவாக்கியுள்ளனர்.
இந்த ஸ்டுடியோ பாரம்பரிய கலைப்பொருட்கள் மற்றும் ஸ்டேட்மென்ட் பிராண்ட் படைப்புகளின் கலவையால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பொருட்களில் மனதை கவரும் சில பொருட்களை வைத்து வடிவமைக்கபட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் நயன்தாரா, சினிமாவைத் தாண்டி பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், நாப்கின் தயாரித்தல் உள்ளிட்ட சில தொழில்களை தொடங்கி நடத்தி வருகிறார்.
அது மட்டுமின்றி ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் படங்களைத் தயாரித்தும் வருகிறார்.
இந்நிலையில் தற்போது சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள தங்களது பங்களாவை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஹோம் ஸ்டூடியோவாக மாற்றி இருக்கிறார்கள். இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |