விமானத்தில் விக்கியின் மடியில் நயன்தாரா! வெளியான ரொமான்டிக் புகைப்படம்
விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் விமான பயணம் செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது.
நயன்தாரா விக்கி ஜோடி
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9ம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகின.
ஸ்பெயினில் இரண்டாவது ஹனிமூனா?
தேனிலவு முடிந்து இந்தியா திரும்பியதும் நயன்தாரா, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சில நாட்களுக்கு முன் இணைந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் & வீடியோக்கள் வெளியாகின. விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக விளம்பர பணிகளில் ஈடுபட்டார்.
இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விமானம் மூலம் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு செல்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் "தொடர் வேலைப்பளுவுக்கு பிறகு எங்களுக்கான நேரம்.. பார்சிலோனா நகருக்கு செல்லும் போது மனைவியுடன்" என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

