திருமண வீடியோவை விற்ற நயன்தாரா...ஒரு பைசா செலவு இல்லாமல் நடந்த திருமணம்...ரசிகர்கள் ஷாக்!
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்கள் திருமணத்தை ஒரு பைசா செலவில்லாமல் நடத்தியதாக இணையத்தில் தீயாய் தகவல் பரவி வருகின்றது.
நயன்தாரா - விக்னேஷ் சிவனை இருவீட்டார் சம்மதத்துடன் ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் அவர்களின் திருமணம் நடந்தது. அங்கு அமைக்கப்பட்ட கண்ணாடி மண்டபத்தில் தான் நயன்தாராவின் கழுத்தில் தாலி கட்டினார்.
ஒரு பைசா செலவு இல்லை....
இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களின் திருமணத்திற்காக பைசா செலவு செய்யவில்லை என்றும், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தான் திருமண செலவை ஏற்றுக்கொண்டது என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.
நயன்தாரா தன் திருமண வீடியோவை நெட்ஃப்ளிக்ஸுக்கு ரூ. 25 கோடிக்கு விற்றுவிட்டாராம்.
திருமண செலவை தேடி பார்த்த ரசிகர்கள் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் உள்ள வயது வித்தியாசத்தை தற்போது தேடி வருகின்றனர்.
ஒரு வயது மூத்தவர்
நயன்தாரா விக்னேஷ் சிவனை விட ஒரு வயது மூத்தவர்.
விக்னேஷ் சிவன் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி பிறந்துள்ளார். அவருக்கு வயது 36 ஆகிறது.
நயன்தாரா 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி பிறந்துள்ளார்.அவருக்கு வயது 37 ஆகிறது.
