ஆடியோ லாஞ்சுக்கு போனாகூட எங்கயாச்சும் ஓரமா நிக்க வச்சிருவாங்க! உண்மையை போட்டு உடைத்த நயன்தாரா
தற்போது கனெக்ட் படத்தின் புரமோஷனுக்காக நயன்தாரா, நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது பட விழாக்களை தவிர்ப்பதற்கான காரணத்தை அதில் கூறிய பல விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேர்காணல்
இதன்படி நேர்காணலில் கூறியுள்ளதாவது “என்னுடைய ஆரம்பக்கட்ட சினிமா வாழ்க்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களாகவே நிறைய வந்தன. அப்போது ஏன் ஹீரோயின்ஸுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் இல்லை என்று என தோன்றும்.
அந்த சமயத்தில் ஒரு ஆடியோ லாஞ்சுக்கு போனாகூட எங்கயாச்சும் ஓரமா நிக்க வச்சிடுவாங்க ஹீரோயின்களுக்கு பெரிய அளவில் மதிப்பு இருக்காது.
பட விழாக்களை தவிர்க்க காரணம்
ஹீரோயின்களைப் பற்றி அதிகமா பேச மாட்டார்கள். அதனால் தான் நான் பட விழாக்களுக்கு செல்வதை தவிர்க்க ஆரம்பித்தேன்.
நாம் ஒரு நல்ல இடத்துக்கு வந்தபின்னர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என எண்ணி இருந்தான். ஆனால் நான் அதை பாலோ பண்ணவில்லை. சினிமாவில் பெண்களும் சமமாக பார்க்க வேண்டும் நான் ஆசைப்பட்டேன்.
அப்போ அது இல்ல ஆனா இப்போ நிறைய படங்கள் பெண்களை மையமாக வைத்தே எடுக்கப்படுகிறது.
இப்போ நிறைய தயாரிப்பாளர்கள் கதாநாயகிகளை மையமாக வைத்து படம் எடுக்க முன் வருகிறார்கள்இதெல்லாம் பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது” என அந்த பேட்டியில் நயன்தாரா கூறயுள்ளார்.
இத்தகவல்கள் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.