பண்டிகை நாளில் நயன்தாராவுடன் நெருக்கம் காட்டும் கணவர்.. பொறாமையில் பொங்கிய ரசிகர்கள்
கணவருடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நயன்தாரா.
இவர் நடிப்பில் கடைசியாக “ அன்னபூரணி ” திரைப்படம் வெளியாகியது. எதிர்பார்த்த அளவில் இல்லாவிட்டாலும் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது.
சினிமா, வியாபாரம், குடும்பம், குழந்தைகள் என பிஸியாக இருக்கும் நயன்தாரா அவரின் சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
பொங்கிய ரசிகர்கள்
அந்த வகையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கணவர், குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்த பிரபலங்கள் “ எங்களுக்கு ஆள் இல்லை என வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஆள் என்னவென்றால் தங்கமே, வைரமே, கண்மணியேனு அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு கடுப்பேற்றுகிறாரே” பொறாமையில் பொங்கியபடி கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இதனை தொடர்ந்து கொஞ்ச நாட்களாக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகவில்லை. பண்டிகையை முன்னிட்டு வெளியான புகைப்படங்களில் சில நெருக்கமாக இருப்பது போல் இருக்கின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் சரமாறியான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |