நயன்தாரா வீட்டில் நடந்த விசேஷம்... ஊரில் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்! காதலர் லீக் செய்த புகைப்படம்
நயன்தாரா வீட்டில் நடந்த விஷேஷத்தின், புகைப்படத்தை தற்போது அவரது காதலர் விக்னேஷ் சிவன் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
காதலில் விழுந்து 5 ஆண்டுகள் ஆனாலும், கோலிவுட் வட்டாரத்தில் எப்போதுமே நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் சங்கதி ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது.
எந்த ஒரு விஷேஷம் என்றாலும், தன்னுடைய சொந்த ஊரான கொச்சிக்கு பறந்து போய்விடும் நயன்தாரா. இம்முறை தன்னுடைய அம்மா பிறந்தநாளை சொந்த ஊரில் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"அன்புள்ள ஓமனா குரியன் அம்மு உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். " என குறிப்பிட்டுள்ளார்.