தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து... நயன்தாரா கர்மா குறித்து போட்ட பதிவு வைரல்
நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் அண்மைக்காலமாக இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
நானும் ரௌடி தான் படத்தின் பகுதியை தனது அனுமதி இல்லாமல் நயன்தாரா மற்றும் நெட்பிலிக்ஸ் பயன்படுத்திவிட்டதாக தனுஷ் தற்போது நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண வீடியோவை நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆவணப்படமாக கடந்த 18 ஆம் திகதி நயன்“தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டனர்.
அதில் நானும் ரௌடி தான் பட காட்சிகள் மற்றும் பாடல்களை பயன்படுத்த அனுமதி கேட்டு நயன்தாரா தரப்பு நடிகர் தனுஷை அணுகிய போதும், இரண்டு வருடமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்பட்தின் ட்டெய்லரில் பயன்படுத்தப்பட்ட நானும் ரவுடி தான் படப்பிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் பயன்படுத்தப்பட்டமைக்கு எதிரான நடிகர் தனுஷ் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தார்.
அதை குறிப்பிட்டு நயன்தாரா தனுஷூக்கு எதிராக வெளியிட்ட கடிதம் சமீபத்தில் இணையத்தில் புதிய புயலையே கிளப்பியது.
கர்மா குறித்து நயன்தாரா பதிவு
இந்நிலையில் நயன்தாரா இன்ஸ்டாவில் கர்மா பற்றி ஒரு பதிவை போட்டிருக்கிறார். "கர்மா என்ன சொல்கிறது என்றால்.. நீ பொய்களால் ஒருவரது வாழ்க்கையை அழித்தால், அதை கடனாக வைத்துக்கொள்.அது வட்டியுடன் திரும்ப வரும்" என நயன்தாரா பதிவிட்டு உள்ளார்.
தனுஷுக்கு நீதிமன்றம் சமீபத்தில் விவாகரத்து வழங்கி இருக்கும் நிலையில், அதை தாக்கி தான் நயன்தாரா பதிவிட்டு இருப்பதாக இணையத்தில் ரசிகர்கள் கமெண்டு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |