நயன்தாராவின் மகன்களை நேரில் பார்த்த பிரபலம்! என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாராவின் மகன்களை நேரில் சென்று பார்த்தாக 80களின் முன்னணி நடிகையொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
நயனின் திருமணம்
தமிழ் சினிமாவிலுள்ள நடிகைகளில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜீன் 9 ம் திகதி இயக்குநர் விக்னேஷ்சிவனை சுமார் 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த திருமணம் இந்தியாவிலுள்ள மிகப் பெரிய நட்சத்திர ஹோட்டலில் ஆல் இந்திய பிரபலங்களின் முன்னிலையில் இடம்பெற்றது.
திருமணத்தை தொடர்ந்து சுமார் நான்கு மாதங்களில் விக்னேஷ் சிவனுக்கும் நயனுக்கும் இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக டுவிட் ஒன்றை வெளியிட்டார்.
இந்த பதிவு சர்ச்சையை கிளப்பிய நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்ததாகவும், முறையாக சட்டங்களை பின்பற்றியே குழந்தை பெற்றுக்கொண்டதாக விளக்கம் அளித்தார் விக்னேஷ் சிவன்.
நேரில் சென்று பார்த்த நடிகை
இந்நிலையில் , 80களில் முன்னணி நடிகையாக வலம்வந்த ராதிகா சரத்குமார் நயன்தாராவின் மகன்களை நேரில் சென்று சந்தித்ததாகவும் அவர்கள் இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் டுவிட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.